Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Justice League (3D) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஈ.வெ.ரா.அரசு கல்லூரியின் கலையரங்கத்தை புதுப்பிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு - சிவா எம்.பி.,

ஈ.வெ.ரா.அரசு கல்லூரியின் கலையரங்கத்தை புதுப்பிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு - சிவா எம்.பி.,திருச்சி ஈவெரா அரசு கல்லுாரியில் கலையரங்கம் புதுப்பிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய எம்பி சிவா முடிவு செய்துள்ளார். திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தலைமையில் ஈவெரா அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், முன்னாள் பேராசிரியர்கள் குப.கணேசன், செல்லப்பா, முன்னாள் பதிவாளர் ராஜமுத்து இருளாண்டி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சியில் உள்ள நூற்றாண்டு கடந்த வரலாற்று நினை விடங்களை புதுப்பிக்க வேண்டும். சிந்தாமணியில் காவிரிக்கரை பகுதியில் ராணிமங்கம்மாள் பயன்படுத்திய கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளன. அவற்றையும் புதுப்பிக்க வேண்டும்.
ஈவெரா அரசு கல்லூரியில் மழைநீர் சேகரிக்க 2 குளங்கள் அமைக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் கால்நடைகள் மற்றும் அந்நியர்கள் நுழைவதை தடுக்க, சுற்றுச்சுவரை புதுப்பித்து தர வேண்டும். கல்லூரியில் உள்ள கலையரங்கத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லுாரியில் உள்ள கலையரங்கத்தை புதுப்பிக்கும் பணிக்கு தனது எம்பி நிதியில் ரூ.20 லட்சம் ஒதுக்கித்தர எம்.பி.சிவா முன்வந்துள்ளார் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
எம்.பி.சிவா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை செய்த மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இவர்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  Source : justknow.in
Post Date : 13-06-18
Total Visitors : 21
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments