Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புதிருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்படும கபீர் புரஸ்கர் விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;
நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இந்தாண்டு 2017-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருத்திற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியானwww.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்தோ அல்லது திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகம், அண்ணா விளையாட்டரங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்றோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.12.2017 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் பெறப்பட்ட தகுதியுள்ள விண்ணப்பங்கள் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி, 0431-2420685 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 06-12-17
Total Visitors : 103
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments