Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கலைஞர் இறுதி அஞ்சலியில் நெரிசலில் சிக்கிய ராகுல்; அலட்சியம் காட்டிய தமிழ்நாடு போலீஸ்; விளக்கம் கேட்ட மத்திய படை

கலைஞர் இறுதி அஞ்சலியில் நெரிசலில் சிக்கிய ராகுல்; அலட்சியம் காட்டிய தமிழ்நாடு போலீஸ்; விளக்கம் கேட்ட மத்திய படை திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போலீசாரின் அலட்சியத்தால் ராஜாஜி அரங்கில் நெரிசலில் சிக்கி தவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கடந்த 7-ம் தேதி உடலநலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் ராஜாஜி அரங்கம் முழுவதும் மனித தலைகளாகவே காணப்பட்டன.
கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அண்ணாசாலை வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் வாலாஜா சாலை வழியாகவும் ராஜாஜி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தி சென்ற பின், சீராக இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்தது.
போலீஸ் அலட்சியத்தால் மூடப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட்டதால் நலாபுறம் இருந்தும் மக்கள் முண்டியடித்தனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜாஜி அரங்கிற்கு வந்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் முன் வராததால் பெரும் நெரிசலில் சிக்கி தவித்தார். தனி பாதுகாப்பு அதிகாரிகள் பதை பதைப்புக்கு ஆளான போதும் எதையும் பொருட்படுத்தாமல் சாதாரண தொண்டரை போல படிகட்டுகளில் திக்குமுக்காடி நின்றிருந்தார் ராகுல்.
வெகுநேரத்திற்கு பின் காவல்துறை உயரதிகாரிகள் வந்து ராகுல்காந்தியை அழைத்துச் சென்றனர். மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கான மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பில் இருக்கிறார் ராகுல்காந்தி. அவரது பாதுகாப்பில் தமிழக போலீஸ் அலட்சியம் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  Source : justknow.in
Post Date : 11-08-18
Total Visitors : 65
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments