Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சியில் 'பிங்க் அக்டோபர்' மாரத்தான்; புற்றுநோய் பாதித்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்- நடிகை கவுதமி

திருச்சியில் 'பிங்க் அக்டோபர்' மாரத்தான்; புற்றுநோய் பாதித்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்- நடிகை கவுதமிசர்வதேச மார்பக புற்றுநோய் தினத்தையொட்டி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை லைப் எகைன் அறக்கட்டளையின் நிறுவனரும் நடிகையுமான கவுதமி துவக்கி வைத்தார்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உலக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 1 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிக உடல்பருமன், பெண்கள் தங்களது அழகைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயினால் பெரும்பாலோனோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
முறையான பரிசோதனையினால் கண்டறிந்து, சிகிச்சைப் பெறுவதினால் ஆரம்பகால கட்டத்திலேயே இதனை சரி செய்யமுடியும். மருத்துவர்களின் அறிவுறுத்தலினாலும், இயற்கை காய்கறிகள் உணவுகளை உட்கொள்வதனாலும் பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட முடியும்.
இதுகுறித்த விழிப்புணர்வை பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
'பிங்க் அக்டோபர்' என பெயரிடப்பட்டிருந்த இந்த ஓட்டத்தில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே 21 கி.மீ, 5 கி.மீ ஓட்டம் நடைபெற்றது. 21 கி.மீ சாலை தொடர் ஓட்டம் மாம்பழச்சாலையிலிருந்தும், 5 கி.மீ ஓட்டம் தில்லைநகர் பகுதியிலிருந்தும் தொடங்கி நடைபெற்றது.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். இத்தொடர் ஓட்டத்தினை மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் நடிகை கௌதமி தொடங்கி வைத்தனர்.
ஆண்களுக்கான 21 கி.மீ பிரிவில் சென்னை ராணுவ பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஹரி, நாகேஷ் பவர் ஆகியோர் முதல் 2 இடங்களையும், பெண்கள் 5 கி.மீ பிரிவில் அகல்யா, ரேணுகா ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்தனர். முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
பின்னர் திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நடிகை கௌதமி பேசியதாவது;
“எனக்கு மற்றும் உங்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. அதனை தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். புற்றுநோயில் இருந்து வெற்றி காணலாம் என்பதையும், அதனை எதிர்கொள்வது எப்படி, சிகிச்சை முறைகள் என்னென்ன என்கிற அனுபவத்தை ஒவ்வொருவரும் புற்றுநோய் பாதித்தவர்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு தைரியம் கொடுத்து உயிரை காப்பாற்றுங்கள்.
இந்த விழிப்புணர்வை இன்று முதல் 10 பேருக்காவது பரப்புவேன் என்று உறுதி ஏற்று கொள்ளுங்கள். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ராணுவபடை போல் செயல்படுங்கள். எனக்கு புற்றுநோய் இருந்த போது எனது குடும்பத்தினரும், மகளும் துணையாக இருந்தனர்“ என்றார்.
நிகழ்ச்சியில் திருச்சி டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் டாக்டர் ஜவகர் நாகசுந்தரம், அறக்கட்டளையின் செயலாளர் சீனிவாசன், மும்பை சேவை வரித்துறையின் உதவி ஆணையர் யமுனாதேவி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீனா, சென்னை எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் துறைத்தலைவர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 09-10-17
Total Visitors : 104
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments