Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை கொண்டு சொல்ல வேண்டியதில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை கொண்டு சொல்ல வேண்டியதில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்புரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், டிஜி லாக்கர் மொபைல் செயலி மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன் அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்து விடும் என்ற பயம் அனைவரிடமும் உள்ளது.
இந்நிலையில், பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசு அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், டிஜி லாக்கர் என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் அசல் அட்டை தொலைந்து விடும் என்ற பயம் பயணிகளுக்கு வராது என்று தெரிவித்துள்ளனர்.

  Source : justknow.in
Post Date : 06-07-18
Total Visitors : 34
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments