Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கலைஞரின் இறுதி அஞ்சலி கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

கலைஞரின் இறுதி அஞ்சலி கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்தி.மு.க தலைவர் கலைஞர் கடந்த 07-ம் தேதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது இறுதி அஞ்சலிக்காக லட்சக்கணக்கானோர் திரண்டலில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்.தேசிய தலைவர் ராகுல், 6 மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர், அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாது, லட்சக்கணக்கான பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கலைஞரின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்ய திமுக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது காலை 11 மணியளவில் தீர்ப்பு வந்தது. மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கச்சொல்லி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குப் பிறகு சில மணி நேரங்கள் போலீஸ் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது, சென்னை ராஜாஜி அரங்கில். பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு கலைஞரின் உடலைக்காண அரங்கி நுழைந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கியவர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 10-08-18
Total Visitors : 49
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments