Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்: அதிக பட்சம் ஸ்ரீரங்கம்; குறைந்த பட்ச வாக்காளர்கள் லால்குடியில்

திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்: அதிக பட்சம் ஸ்ரீரங்கம்; குறைந்த பட்ச வாக்காளர்கள் லால்குடியில்திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின், ஆணைப்படி 2018-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இன்று வெளியிட சார்ஆட்சியர் கமல்கிஷோர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீரங்கம் தொகுதி அதிகபட்ச வாக்காளர்களும், குறைந்த பட்சமாக லால்குடி தொகுதியிலும் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 10,74,806 நபர்களும், பெண் வாக்காளர்கள் 11,26,522 நபர்களும், 185 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 22,01,513 வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,31,610 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,35,342 நபர்களும், 6 இதர வாக்காளரும் என 2,66,958 வாக்காளர்களும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,40,229 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,48,654 நபர்களும், 21 இதர வாக்காளர்களும் என 2,88,904 வாக்காளர்களும், திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,24,308 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,32,388 நபர்களும், 12 இதர வாக்காளர்களும் என 2,56,708 வாக்காளர்களும், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,328 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,25,441 நபர்களும், 37 இதர வாக்காளர்களும் என 2,44,806 வாக்காளர்களும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,35,536 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,38,727 நபர்களும், 50 இதர வாக்காளர்களும் என 2,74,313 வாக்காளர்களும், இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,00,986 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,06,494 நபர்களும், 14 இதர வாக்காளர்களும் என 2,07,494 வாக்காளர்களும், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,09,898 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,15,778 நபர்களும், 28 இதர வாக்காளர்களும் என 2,25,704 வாக்காளர்களும், முசிறி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,07,278 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,11,839 நபர்களும், 13 இதர வாக்காளர்களும் என 2,19,130 வாக்காளர்களும், துறையூர் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,05,633 நபர்களும், பெண் வாக்களார்கள் 1,11,859 நபர்களும், 4 இதர வாக்காளர்களும் என 2,17,496 வாக்காளர்களும் என மொத்தம் 10,74,806 ஆண் வாக்காளர்களும், 11,26,522 பெண் வாக்காளர்களும், 185 இதர வாக்காளர்கள் என திருச்சி மாவட்டத்தில் 22,01,513 வாக்காளர்கள் உள்ளனர்.
01.01.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 03.10.2017 முதல் 15.12.2017 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. கடந்த 08.10.2017 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமின் போது 8,516 விண்ணப்பங்களும், 22.10.2017 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமின் போது 11,297 விண்ணப்பங்களும் வரப்பெற்றன.
சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் 55,832 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 54,459 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, 1,373 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, 18,343 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள 26,702 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளில் மக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்.
மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, அனைத்து கட்சி பிரதிநிதிகள், இராவணன் (அஇஅதிமுக), அன்பழகன் (திமுக), சிவாஜிசண்முகம், வரதராஜன் (இந்திய தேசிய காங்.), காளீஸ்வரன் (பாரதிய ஜனதா கட்சி), இந்துராஜ் (மார்க்சிஸ்ட்), சுரேஷ் (இ.கம்யூ.), திருப்பதி (தேமுதிக), கோவிந்தராஜ், ஜெயக்குமார் (தேசியவாத காங்.) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 131
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments