Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்புநில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
திருச்சி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநர் பதவி ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 1.7.2018 அன்று 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு அரசு நிர்ணயித்த வயது வரம்புக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் திருச்சி மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை வெள்ளை தாளில் பூர்த்தி செய்து ஓட்டுநர் உரிமம் நகலுடன் உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை, மாவட்ட ஆட்சியரகம் திருச்சி. என்ற முகவரிக்கு 31.7.2018-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 என்ற ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் நேரிலும் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Source : justknow.in
Post Date : 12-07-18
Total Visitors : 94
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments