Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கொடியேற்றி நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்

ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கொடியேற்றி நிர்வாகிகளை அறிவித்தார் கமல்ஹாசன்சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவித்தார். பொதுச்செயலாளராக அருணாச்சலம், கட்சியின் பொருளாளராக சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யபட்டுள்ளதாக தெரிவித்த கமல், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது என்றும் உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவர் என்றும் அறிவித்தார்.
* கொடியேற்று விழாவின்போது, ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்று விழாவினை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

  Source : justknow.in
Post Date : 12-07-18
Total Visitors : 115
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments