Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பிறப்பு உள்பட 20 வகையான சான்றிதழ்களை இணையதளத்தின் மூலம் பொதுமக்களே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்

பிறப்பு உள்பட 20 வகையான சான்றிதழ்களை இணையதளத்தின் மூலம் பொதுமக்களே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்திருச்சி மாவட்டத்தில் வருவாய்துறையின் சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்களை பெற ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் பொதுமக்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்கு.இராசாமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் 225 பொதுசேவை மையங்கள் மூலமாகத் தற்போது 20 வருவாய்த்துறை சான்றிதழ்கள், பட்டாமாறுதல் மற்றும் சமூகநலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொது சேவைமையங்கள் மூலமாக வழங்கங்கப்படும் 20 வருவாய்த்துறை சான்றிதழ்களின் விவரங்களான 1.விவசாய வருமான சான்றிதழ், 2. வாரிசு சான்றிதழ், 3. குடிபெயர்வு சான்றிதழ், 4. சிறு குறு விவசாயி சான்றிதழ், 5. வசிப்பிடசான்றிதழ், 6. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், 7. கலப்புதிருமண சான்றிதழ், 8. சொத்துமதிப்பு சான்றிதழ், 9. திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், 10. விதவை சான்றிதழ், 11. அடகுவணிகர் உரிமம், 12. இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், 13. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், 14. கடன் கொடுப்போர் உரிமம், 15. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ், 16. வருமானவரி சான்றிதழ், 17. சாதி சான்றிதழ், 18. பிறப்பிட, இருப்பிடசான்றிதழ், 19. முதல் பட்டதாரி சான்றிதழ், 20. கைவிடப்பட்டபெண் என்பதற்கான சான்றிதழ். போன்ற 20 சேவைகளையும் தற்போது பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின்னாளுமை திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுவரும் சேவைகளை இணையதளம் மூலம் பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே 24X7 நேரமும் விண்ணப்பித்துப் பெற்றிடும் வகையில், என்ற திறந்தநிலை சேவைதளம் Open Portal உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 20 சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் என்ற இணையதள முகவரியில் தங்களைப் பதிவு செய்து தங்களுக்கான பயனர் பெயர் (User Name) பெற்ற பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.
இதற்கான வழிமுறைகள் மற்றும் ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 10-08-18
Total Visitors : 125
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments