Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  சுகாதார விழிப்புணர்வு பேரணி

சுகாதார விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்தை திறந்த வெளி மலம் கழிக்கும் நிலை இல்லாத மாவட்டமாக உருவாக்குதல் தொடர்பான சுகாதார விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் கு.இராசாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டர் முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற தலைப்பிலான உறுதிமொழியை வாசிக்க, எனது கிராமத்தை தூய்மை கிராமமாகவும், நமது தமிழ்நாட்டை தூய்மை தமிழகமாகவும் மாற்றிட நான் என்றென்றும் முயற்சி செய்வேன், எனது கிராமம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமமாக மாற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்வேன், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நகம் வெட்டும் பழக்கம், சோப்பினால் கை கழுவும் பழக்கங்களை கற்பிப்பதுடன் நானும் மேற்கொள்வேன் என்று அனைத்து அலுவலர்களும், பள்ளி மாணவ, மாணவியர்களும், செவிலியர்களும் உறுதி ஏற்றனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் துவங்கிய இந்த பேரணியானது, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி, வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் சென்றடைந்தது.
இந்த பேரணியில் கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களும், பள்ளி மாணவ, மாணவியர்களும், தேசிய சேவைதிட்ட மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்பட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, குடிப்போம், குடிப்போம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிப்போம், பாடுபடுவோம், பாடுபடுவோம் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமமாக்க பாடுபடுவோம், பயன்படுத்துவோம், பயன்படுத்துவோம் கழிவறைகளை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கி சென்றனர்.
இந்த பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) பாஸ்கர், உதவி திட்ட அலுவலர்கள் கலைச்செல்வி, காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 12-08-17
Total Visitors : 14
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments