Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை கிரேஸ் கென்னட் பவுண்டேசனில் ஒப்படைப்பு

அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை கிரேஸ் கென்னட் பவுண்டேசனில் ஒப்படைப்புகடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் மாவட்ட குழந்தைகள் நலக் குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை, பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த போது, அக்குழந்தையின் தாய் குழந்தையை விட்டுசென்று விட்டார். அப்பெண் அளித்த முகவரியும் தவறாக இருந்தது. அதனால் சமூக நலத்துறையின் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலமாக கைவிடப்பட்ட ஆண்குழந்தையை, மதுரை மாவட்டம், 34-கென்னட் ரோடு, கிரேஸ் கென்னட் பவுண்டேசன் என்ற சிறப்பு குழந்தை தத்து மைய சமூக பணியாளர் பாண்டி மற்றும் குழந்தை பராமரிப்பாளர் பிரேமா ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி ஒப்படைத்தார்.
கைவிடப்பட்ட அக்குழந்தைப் பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் ஏழு நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக் குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் அக்குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.
குழந்தைப் பற்றிய தகவல்களை தெரிவிக்க தலைவர், உறுப்பினர்கள், குழந்தைகள் நலக்குழு, அரசு கூர்நோக்கு இல்லம் இ.பி. ரோடு, திருச்சிராப்பள்ளி. அலைபேசி எண்: 99422 76404 மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, ரேஸ்கோர்ஸ் ரோடு, காஜாமலை, திருச்சிராப்பள்ளி அலைபேசி எண்: 90472 83819 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழந்தைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

  Source : justknow.in
Post Date : 10-03-18
Total Visitors : 27
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments