Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Justice League (3D) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்திருச்சி மாநகராட்சி மைய அலுலகம் மற்றும் பொன்மலை கோட்டத்தில் பணிபுரியும் மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமை மாநகராட்சி ஆணையர் ந.இரவிச்சந்திரன் பார்வையிட்டார்.
இம்மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்திலல் சக்கரை அளவு, பொது மருத்துவம், பெண்ணியல் மருத்துவம், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய மருத்துவ பரிசோதனைகளை சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணைஇயக்குனர் அனுசுயா, மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் 6 மருத்துவர்கள் கொண்ட குழு 530 மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதேபால் மற்ற இரண்டு கோட்டங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வரும் 19-ம் தேதி ஸ்ரீரங்கம் கோட்டத்திலும், 26-ம் தேதி அரியமங்கலம் கோட்டத்திலும் நடைபெறும். இந்த மருத்துவ முகாமில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

  Source : justknow.in
Post Date : 13-06-18
Total Visitors : 75
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments