Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  வரும் 20-ல் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை:காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் மெழுகு வத்தி ஏந்தி விழிப்புணர்வு போராட்டம்

வரும் 20-ல் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை:காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் மெழுகு வத்தி ஏந்தி விழிப்புணர்வு போராட்டம்புது டெல்லியில் இம்மாதம் 20-ம் தேதி விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள பேரணி மற்றும் போராட்டத்தை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக நேற்று மாலை மெழுகு வத்தி தீபம் ஏற்றி விழிப்புணர்வு போராட்டத்தை காட்டுமன்னார்கோவிலில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின், கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழக விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த ஜூலை மாதம் 16-தேதி முதல்141 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த தொடர் போராட்டத்திற்கு மத்திய அரசு எந்தவிதத்திலும் செவிசாய்க்கவில்லை. ஆகவே, வரும் 20-ம் தேதி தலைநகர் டெல்லியில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 5 லட்சம் பேர் ஒரே நேரத்தில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் கடைத்தெரு பகுதிகளில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் மெழுகு வத்தி தீபம் ஏந்தி விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தினர்.

  Source : justknow.in
Post Date : 14-11-17
Total Visitors : 159
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments