Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பிரபல பத்திரிகையாளர் சவுபா காலமானார்

பிரபல பத்திரிகையாளர் சவுபா காலமானார்சீவலப்பேரி பாண்டி' என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் சவுபா என்றழைக்கப்படும் சவுந்தரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் குறிப்பிட்ட சமூகம் குறித்து முதன் முதலில் விரிவாக எழுதியவர். கருத்தம்மா படத்தின் மூலக் காரணியான சவுபா மறைவு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சவுபாவின் மனைவி லதாபூர்ணம், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சவுபாவும் லதாபூர்ணமும் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். லதா பூர்ணம் தனியாக கோவில்பட்டியில் வசித்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகன் விவின். சென்னை லயோலோ கல்லூரியில் பட்டம் படித்தார். கல்லூரி பருவத்தில் சேர்க்கை சரியில்லாமல் கெட்ட சகவாசங்களை வளர்த்தார். போதை, பெண் விவகாரம் என பல்வேறு பிரச்னைகளை தினம் தினம் வீட்டுக்கு கொண்டுவந்தார்.
ஒரு கட்டத்தில் தந்தையை அடித்து கொடுமை செய்துள்ளார். சர்க்கரை இதய நோயினால் பாதிக்கப்பட்ட சவுபா மகனால் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வாழ்ந்திருக்கிறார். கடந்த மாதம் அவரது அம்மாவை அடித்து தலையில் தீயை வைத்துள்ளார் அவரது மகன் விவின். ஒவ்வொரு மாதமும் உழைக்காமல் அப்பாவிடமும் , அம்மாவிடமும் பணத்தை வாங்கி ஊதாரியாக சுற்றியதோடு தாய் தந்தையரை மிக மோசமாக நடத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சவுபா, போதையில் இருந்த விவினை இரும்பு கம்பியால் அடித்து சமீபத்தில் கொலை செய்து உடலை யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் புதைத்துள்ளார்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் தனது மகன் விவினை காணவில்லை என தாய் லதா பூரணம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சவுபாவை போலீஸார் விசாரித்ததில் சவுபா தனது மகனை தானே கொலை செய்ததாக ஒத்துக்கொண்டார்.
இதுதொடர்பான வழக்கில் சௌபா, அவரது தோட்டத் தொழிலாளிகள் பூமி, கனிக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் இருந்த சவுபாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலை மேலும் மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரது உடல் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Source : justknow.in
Post Date : 12-06-18
Total Visitors : 125
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments