Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்புதண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று நண்பகல் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் தவிர்ப்போம், சூழல் காப்போம் என்ற விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.
இந்த நாடகத்தில் மாணவர்கள் பங்கேற்று பிளாஸ்டிக் தவிர்த்து துணிப்பை பயன்படுத்தக்கோரி நடித்தும், பிளாஸ்டிக் எமன் என்றதை வலியுறுத்தி நடித்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு துணிப்பையை தண்ணீர் அமைப்பினர் வழங்கினர். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி நீலமேகம் தலைமையில் இணைசெயலாளர்கள் பேராசிரியர் கி.சதீஸ்குமார் , ஆர். ஏ.தாமஸ், தண்ணீர் அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா, முனைவர் மரகதம், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆர்.சந்திராதேவி, அருணா, ரீனா, ராணி, விக்டோரியா, மரீனா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியார்கள், பேற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.
முடிவில் பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம் என முழக்கத்துடன் சுற்றுச்சூழல் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

  Source : justknow.in
Post Date : 06-06-18
Total Visitors : 101
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments