Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைவிழா

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைவிழாஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி சமூகப் பணித் துறை டிரஸ்ட் மீ அறக்கட்டளை அதிதியா கிளப்புடன் இணைந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விழா கல்லூரி பாதுகா அரங்கில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா துவக்க உரையாற்றினார். இயக்குநர் முனைவர் ராமானுஜம் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, அறிவியல் புல முதன்மையர் முனைவர் ஜோதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
புற உலகு சிந்தனையற்ற ஆட்டிசம் குறைபாடு, மூளை முடக்குவாதம், அதீத செயல்திறன் கொண்டோர், பல வழி ஊனமுற்றோர் என மாற்று திறனாளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, வண்ணம் தீட்டுதல், அதிர்ஷ்ட சக்கரம், பாட்டு, குழு நடனம், தனிநபர் நடனம் என கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி மாற்று திறனாளி மாணவர்கள் வெளி உலகில் தொடர்பு கொள்ளவும், தனித்திறமையை வளர்த்துக் கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவும் வழிவகை செய்யும் வகையில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறையினர் 9-வது ஆண்டாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சமூகப் பணித்துறை தலைவர் சித்ரா வரவேற்க, உதவி பேராசிரியர் முனைவர் அருண் பிரகாஷ் நன்றி கூறினார்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 76
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments