Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திமுக செயற்குழு வரும் 14-ல் கூடுகிறது - பொதுச்செயலாளர் அன்பழகன்

திமுக செயற்குழு வரும் 14-ல் கூடுகிறது - பொதுச்செயலாளர் அன்பழகன்திமுக தலைவர் கலைஞர் கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் திமுக செயற்குழு அவசர கூட்டம் வருகிற 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
திமுக தலைவர் கலைஞர் மறைவை அடுத்து திமுக செயற்குழு அவசர கூட்டம் வருகிற 14-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கிறது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திமுக தலைவர் கலைஞர் மறைவுற்ற நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கவும் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கவும் தீர்மானக்குழு, தணிக்கை குழு கூட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 14-8-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Source : justknow.in
Post Date : 11-08-18
Total Visitors : 65
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments