Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Meyaadha Maan Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம்; சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் கையிருப்பு-செல்லூர் கே.ராஜீ

டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம்; சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் கையிருப்பு-செல்லூர் கே.ராஜீடெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம்; சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் கையிருப்பு-செல்லூர் கே.ராஜீ

டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் கே.ராஜூ சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நடப்பு சம்பா சாகுபடிக்கு தேவையான பயிர்கடன் இடுபொருட்கள் வழங்குதல் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர்(மணப்பாறை) எம்.செல்வராஜ்(முசிறி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு இருமடங்கு விவசாய உற்பத்தி, விவசாயிகளின் வருவாயை மும்மடங்கு என பெருக்கிடவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடனும், கடந்த 6 ஆண்டுகளில் 2011-2017 வரையிலான காலத்தில், மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக 61,60,856 விவசாயிகளுக்கு 29,374.26 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2016-2017 முதல் 2020-21 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 40,000 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2017-2018-ம் ஆண்டில் ரூபாய் 7000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு 30.9.2017 வரை 3,03,448 விவசாயிகளுக்கு ரூபாய் 1,932.04 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில், 2017-18-ம் ஆண்டில் 30.9.2017 வரை ரூபாய் 132.75 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கென கடந்த 2.10.2017 முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதற்கு இணங்கவும், கூடுதலாக 29 சதவீதம் மழை பெய்ததை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட ரூபாய் 41.15 கோடி மதிப்பீட்டில் சம்பா சாகுபடி தொகுப்புத் திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தவும், நடப்பு சம்பா பருவத்தில் மத்திய மற்றும் குறுகிய கால நெல் ரகங்களை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யவும், தரமான விதைகள், கனிம உரங்கள் மற்றும் பல்வேறு இடுப்பொருள்கள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதிற்கு இணங்க டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளுக்கு தேவையின் அடிப்படையிலும், தகுதிகளுக்கு உட்பட்டும் தாராளமாக பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்கு தேவையான உர இருப்பு குறித்து ஆய்வு செய்த போது யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் அக்டோபர் மாதத்திற்கு 1,40,930 மெ.டன் மொத்த உரத்தேவை இருக்கும் எனவும், அதில் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பான 35,233 மெ.டன் உரங்கள் தேவையில், தற்போது கூடுதலாகவே, அதாவது 36.925 மெ.டன் கையிருப்பில் உள்ளது. எனவே கூட்டுறவு சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரக் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்கு விதை நெல் தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சம்பா சாகுபடிக்கு தேவையான 570 மெ.டன் விதைகள் இருப்பில் உள்ளன.
டெல்டா மாவட்டங்களில், 30.9.2017 வரை நெல் காரீப் பருவம், நெல் இரண்டாம் பருவம், பயிர் வகைகள் மற்றும் இதர பயிர்கள் என பல்வேறு பயிர் வகைகளில் 25,479 விவசாயிகள், 63,624.53 ஏக்கர் பரப்பளவிற்கு ரூபாய் 118.21 கோடி அளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில், 2017-2018ஆம் ஆண்டில் 30.9.2017 வரை 2,61,808 விவசாயிகளுக்கு ரூபாய் 783.49 கோடி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் வேளாண் சேவை மையங்களில் உழவுப் பணிக்கு தேவைப்படும் வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை உழவு பணிக்கு குறைந்த வாடகைக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள கடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் 30.10.2017 வரை 21,710 ரூபே கடன் அட்டைகளும், 27,371 ரூபே கிசான் கடன் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசின் பெரும் முயற்சியால் மாநிலத்தில் உள்ள 4467 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 112 விற்பனை சங்கங்கள் ஆகியவற்றில் 3,879 கிடங்குகள் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டு 5,10,600 மெ.டன் கொள்ளளவு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநில கூடுதல் பதிவாளர் ஜான்பீட்டர்அந்தோணிதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராமு(திருச்சி), ஆசைமணி(கும்பகோணம்), துரைதிருஞானம்(தஞ்சாவூர்), செல்லதுரை(புதுக்கோட்டை), சோ.இளஞ்செல்வி(கடலூர்), மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பத்மநாதன், அமராவதி கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயபால், மண்டல இணைப்பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 10-10-17
Total Visitors : 32
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments