Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய திருச்சி மாநகராட்சிக்கு பாராட்டு

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய திருச்சி மாநகராட்சிக்கு பாராட்டுதமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளை பாராட்டி அந்தந்த ஆணையர்களுக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தி வரும் சீர்மிகு நகர திட்டங்கள் (Smart City) மற்றும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டங்களின் (AMRUT) செயல்பாடுகள் குறித்து சென்னை குடிநீர் வாரிய கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறந்து விளங்கிய மாநகராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக கோயம்புத்தூர் மாநகராட்சி டாக்டர் கே.விஜயகார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.அனிஷ் சேகர், திருச்சி மாநகராட்சி ஆணையாளர் என்.ரவிச்சந்திரன் ஆகியோர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் தினந்தோறும் 7585 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேரகமாகின்றது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகள் அனைத்தும் அடங்கும்.
திடக்கழிவு மேலாண்மையின் ஒரு அங்கமாக மக்கும் கழிவுகள் அனைத்தும் பரவலாக்கப்பட்ட நுண் உரமாக்கும் மையங்கள் மூலம் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் மொத்த கழிவுகளில் சுமார் 2000 மெ.டன் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகளான பிளாஸ்டிக் கழிவுகள் வாரந்தோறும் சேகரிக்கப்பட்டு வந்தது.
நகராட்சி நிர்வாக ஆணையரின் வழிகாட்டுதலுக்கிணங்க சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் மொத்தக்கழிவு வியாபாரிகளிடம் விற்கப்பட்டு, அதன் வாயிலாக பெறப்படும் தொகையானது மாநகராட்சி / நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.
இவ்வகையில் ஜூன் 2017 முதல் டிசம்பர் 2017 வரையிலான காலத்தில் சுமார் 28,000 மெட்ரிக் டன் மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகள் சேகரம் செய்து, ரூ.8.00 கோடி விற்கப்பட்டு, அத்தொகையானது 18,695 துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் நகராட்சி நிர்வாக ஆணையர்
ஜி. பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 93
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments