Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; விரைவில் காவிரியை திறந்து விடுங்கள் ட்விட்டரில் கோரிக்கை

எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து; விரைவில் காவிரியை திறந்து விடுங்கள் ட்விட்டரில் கோரிக்கை கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் பாஜகவைச்சேர்ந்த எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மாறாக எதிர்க்கட்சியான பாஜக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக 121 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 59 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 இடங்களிலும் முன்னிலைபெற்றுள்ளன. பாஜகவின் முதல் மந்திரி வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சி அமைக்க 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. ஆனால், பாஜக தற்போது 110 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதனால் பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் முதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள எடியூரப்பாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டரில் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “ கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு.எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 114
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments