Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அரவை துவக்கம்

செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அரவை துவக்கம்உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியசெவலை நவீனமயமாக்கப்பட்ட செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம். ரூ.137கோடியில் 18 மெகாவாட் மின் உற்பத்தியுடன் கூடிய நவீன ஆலையில் -3 ஆண்டுகளுக்கு பிறகு 2017-18 ஆம் ஆண்டு பருவ அரவை தொடங்கியது. பழைய ஆலை 2 ஆயிரம் டன் அரவை திறன் கொண்டதாக இருந்தது. தற்போதைய ஆலை அதிகபட்சமாக 5 ஆயிரம் டன் வரை கரும்பு அரவை செய்யும்.
18 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதன் மூலம் இதன் அருகில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் மாநில சர்க்கரை இணைய தலைவர் கே.ஜி.பி. ஞானமூர்த்தி.-சட்ட மன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, உதயசூரியன், தலைமை சர்க்கரை பொறியாளர் சுப்ரமணியன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அப்பகுதியின் முக்கிய பிமுகர்கள், விவசாயிகள், அதிகாரிகள் என அனைவரும் கலந்துகொண்டனர். நிலுவை பாக்கி ரூ.26 கோடியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இந்தாண்டு கரும்புக்கான ஆதார விலையை ரூ.4 ஆயிமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் இரா.குமரகுரு கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 07-12-17
Total Visitors : 64
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments