Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்; மாநிலங்களவையில் எம்.பி.சிவா

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்; மாநிலங்களவையில் எம்.பி.சிவாமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
திமுக தலைவர் கலைஞர் கடந்த 7ம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்த கலைஞரை கவுரவிக்கும் வகையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்பி.க்கள் நேற்று வலியுறுத்தினர். இது தொடர்பாக திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசியதாவது: திமுக தலைவர் கருணாநிதி வலிமைமிக்க திராவிடரும், நாட்டின் உயர்ந்த அரசியல் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்தவரும் ஆவார்.
தனது 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில், ஏழைகள், அடித்தட்டு மக்கள், பின்தங்கியவர்களின் நலனுக்கு போராடியவர். மிகச்சிறந்த பேச்சாளர், திறமைமிக்க எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வாழ்வின் அனைத்து தடங்களிலும் முத்திரை பதித்த அவர், ஈடுஇணை இல்லாதவர். தனது கடைசி மூச்சு வரை சமூக நீதிக்காக, மதச்சார்பின்மைக்காக, சுய மரியாதைக்காக போராடியவர். வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதினை வழங்கிட வேண்டும். அதுவே, அவரது முன்மாதிரியான மிகச்சிறந்த சேவைக்கு வழங்கிடும் உண்மையான மரியாதையாகும்.
இவ்வாறு திருச்சி சிவா கூறினார். இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எம்பி.க்களும் ஆமோதித்து வரவேற்றனர்.

  Source : justknow.in
Post Date : 11-08-18
Total Visitors : 72
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments