Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடைபெற்றது.
திருச்சி புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, வனத்துறையின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானது புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, ஐயப்பன் கோவில் வழியாக அரசு மருத்துவமனை, புத்தூர் ரோடு வழியாக புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, சென் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மெத்தடிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம், பிளாஸ்டிக் பையினால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், பிளாஸ்டிக் கழிவுகள் பூமிக்குள் நீர் புகாமல் தடுத்து விடுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளி சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் போடும் பொழுது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் கிருமிகள் உற்பத்தியாகின்றன. இதனால் பல்வேறு வகையான நோய்கள் பரவுகிறது. பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருட்கள் நிலத்தின் நீரின் தன்மையையும் வெகுவாக பாதிக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களை அழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணி பைகளை காகிதம், சணல் பைகள் பயன்படுத்த வேண்டும். தொன்னை, காகிதம் மற்றும் கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்த வேண்டும். உணவு விடுதிகளில் உணவு பொருட்களை பார்சல் வாங்கும் பொழுது வாழை இலையை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நமது மாவட்டத்தில் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாணவ, மாணவியர்கள் கோஷமிட்டவாரும், பதாகைகள் ஏந்தியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழலை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டலம் தலைமை வனப்பாதுகாவலர் யோகேஷ்சிங், மாவட்ட வன அலுவலர் து.சுஜாதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.அனிதா, உதவி வனப்பாதுகாவலர் சம்பத் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 06-06-18
Total Visitors : 44
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments