Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வு வாகனம் துவக்கம்திருச்சி மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. திறன் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தொடங்கி வைத்து, திறன் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் படித்து வேலையற்ற இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் பயிற்சி குறித்த விவரங்களை பொது மக்கள் அறியும் வண்ணம் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சென்று விளம்பரபடுத்திட திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும். இத்திறன் பயிற்சி அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து கட்டணமாக ரூபாய் 100 வழங்கப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு விதமான திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்த பின்னர் அரசு சான்றிதழ் வழங்கப்படும். அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும் தனியார்துறையில் ரூபாய் 5000க்கு மேல் மாதஊதியம் அளிக்ககூடிய பணிநியமனம் பெற்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு திறன் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம், தையல் இயந்திரம் இயக்குபவர், தையல்காரர் (அடிப்படை தையல் இயந்திரம இயக்குபவர்), சணல் முறுக்குபவர், ஆர்க் கேஸ் வெல்டிங், டிக் வெல்டர், தை தையர் பூ கலைஞர், குந்தன் அணிகலன்கள் தயாரிப்பவர், மருந்தக உதவியாளர், சமையர்காரர், ஜர்தோஷ் வேலைப்பாடு, கணக்கு உதவியாளர், சுகாதார பாதுகாப்பு பல் உபயோகபணியாளர், தள தொழில்நுட்ப வல்லுநர், சக்கர வாகன பராமரிப்பு, ஓட்டுநர் மற்றும் கம்மியர், போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அனிதா, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 88
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments