Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்புமுதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெண் கல்வியை ஊக்குவிக்கவும், பெண் குழந்தையை கருவிலேயே அழிப்பதை தடுப்பதற்காகவும், தமிழக அரசால் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சமூகநலத்துறையின் மூலமாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரே பெண் குழந்தையுடன் பெண் குழந்தையின் தாயோ, தந்தையோ குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இக்குழந்தையின் பெயரில் ரூ.50,000க்கு சேமிப்பு பத்திரமாகவும், 2 பெண்குழந்தைகளுடன் பெண் குழந்தையின் தாயோ, தந்தையோ குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 வீதம் சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண்குழந்தைகளும் பிறந்து அப்பெண் குழந்தையின் தாயோ, தந்தையோ குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஒரு குழந்தைக்கு ரூ.25,000 வீதம் 3 குழந்தைகளின் பெயரிலும் ரூ.75,000 மதிப்பிலான சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பயனாளிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். தாயோ, தந்தையோ 35 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 2-வது பெண் குழந்தை பிறந்த மூன்று வருடத்திற்குள் இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தின்கீழ் வைப்புத்தொகை ரசீது பெற்று ஐந்தாண்டு முடிவுற்ற குழந்தைகளுக்கு வைப்புத்தொகை புதுப்பித்தல் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி தங்களது குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைக்கான ரசீது பெற்ற பெற்றோர்கள், வைப்புத்தொகை ரசீது பெற்று ஐந்தாண்டுகள் முடிந்திருப்பின், பெண் குழந்தை கல்வி பயின்று வருவதற்கான சான்று, பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டுள்ள விவரம், பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தையும், மாநகராட்சிப் பகுதிக்குட்பட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தையும் அணுகி புதுப்பித்துக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் வைப்புத் தொகை ரசீது பெற்று 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள், முதிர்வு தொகை பெறுவதற்கு(10ம் அரசு பொது தேர்வு எழுதியிருக்க வேண்டும்) உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்கள் தேவைப்படின், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0431-2413796 மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 50
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments