Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட திருமண அழைப்பிதழ் வடிவில் நூதனப் பிரச்சாரம்

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட திருமண அழைப்பிதழ் வடிவில் நூதனப் பிரச்சாரம்சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச் சூழல் மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் திருமண அழைப்பிதழ் வடிவில் மரம் வளர்ப்போம் மனித நலன் காப்போம் என அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர் அமிர்தம் சமூக சேவை அறக் கட்டளையினை நடத்தி வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர்.
அழைப்பிதழில் தமிழ்நாட்டில் 17.59 சதவீத பரப்பளவு அதாவது 22,877 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வனப் பகுதியாக உள்ளது. ஒரு நாடு வளமான பகுதியாக இருக்க வேண்டுமென்றால் 33.3 சதவீதம் அடர்த்தியான வனங்களாக இருக்க வேண்டும். விளை நிலங்கள் விற்கப்பட்டு காங்கிரீட் கட்டிடங்களாக மாறி வருகின்றன. காட்டுவளமும் மளமளவென மாய்ந்து வருகின்றன. மர அழிப்பால் நிழற்பாங்கு குறைதல், மண் அரிப்பு ஏற்படுதல், வெள்ளப் பெருக்கு, வெப்பமூட்டம் அதிகரித்தல், மழைப்பொழிவு குறைதல், மண்ணில் நீர் வளம் குறைதல் உட்பட வறட்சி ஏற்படுகிறது.
அது மட்டுமல்ல மரங்களை சார்ந்து வாழும் புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் இன்று இடம் பெயர்ந்தும் காணாமல் போய் வருகின்றன. ஒருவர் ஒரு மரம் வளர்த்தால் மனித சமூகம் வளரும், சமுதாயம் வளரும், வரும் சந்ததியினருக்கு பசுமையான சூழலை கொடுக்கலாம்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 - 18 முறை சுவாசிக்கிறோம். ஒரு முறை 0.5லி காற்றை உள் சுவாசிக்கிறோம். ஒவ்வொரு நாளும் 22,000 முறை சுவாசித்து 16 கி.கி ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழ்கிறோம். மனித சமுதாயத்திற்கும் , சுற்று சூழலுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் நமது தேவைக்காக மரம் நட்டு வளர்ப்போர் என்கிற வரனும், சுற்று சூழல் மேம்பட, மாசுபாட்டினைக் குறைத்திட, பறவையினங்களுக்கு புகலிடம் அளித்திட , மண்ணில் ஈரப்பதத்தையும், வளத்தையும் தக்க வைத்திட , மண் அரிப்பை தடுத்திட , மழைப் பொழிவு ஏற்பட்டிட காடு வளம் வேண்டி மரம் வேண்டும் என்கிற வரனும் இணைந்து பசுமை தமிழகமாக்க உள்ளார்கள்.
மரம் தானம் வழங்கி நட்டு நாட்டின் நலன் காக்கும் நல்லோர்களும், அறிஞர்களும், பொதுமக்களும், மகளிர்களும், இளைஞர்களும், திருநங்கையர்களும், கல்லூரி தோழர்களும், தோழியர்களும் மற்றும் சுற்றமும் நட்பும் சூழ உறுதியேற்போம் என அழைப்பிதழ் வழங்கி வந்தனர்.

  Source : justknow.in
Post Date : 06-06-18
Total Visitors : 49
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments