Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் திருத்தம்; ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் திருத்தம்; ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரியப் பாதுகாப்பினை வழங்கிட வலியுறுத்தியும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், மதிமுக சார்பில் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் கே.ஆர். ராமசாமி பேராசிரியர் காதர் மைதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராகக் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இந்தியா முழுவதிலும் பாரத் பந்த் நடத்தப்பட்டது. கேரளாவில் கடந்த 9-ம் தேதி இதே காரணத்திற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராகப் பெரிதாக போராட்டங்கள் நடைபெறாமல் இருந்தன. தற்போது, திமுக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

  Source : justknow.in
Post Date : 16-04-18
Total Visitors : 110
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments