Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 463 மனுக்கள்; 120 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 463 மனுக்கள்; 120 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 120 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு விலையில்லா சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 17 ஆயிரம் பெறுவதற்கான ஆணையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலியும், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 4 பயனாளிகளுக்கு மாதம் தோறும் தால ரூபாய் 1500 பெறுவதற்கான ஆணையினையும் அவர் வழங்கினார்.
திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் முதியோர் உதவித்தொகையாக 19 பயனாளிகளுக்கு மாதம் தோறும் தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையினையும், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலங்கை அகதிகள் முகாம் முதியோர் உதவித்தொகை என 20 பயனாளிகளுக்கு மாதம் தோறும் தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையும், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் முதியோர் உதவித்தொகை மற்றும் ஆதரவற்ற விதவை உதவித்தொகை 33 பயனாளிகளுக்கு மாதம் தோறும் தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 5000 ஆயிரத்திற்கான காசோலையும், இலால்குடி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகையாக 12 பயனாளிகளுக்கு மாதம் தோறும் தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையும், மருங்காபுரி வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகையாக 14 பயனாளிகளுக்கு மாதம் தோறும் தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையும் என மொத்தம் 120 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகைளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அதேபோல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இந்திரா காலணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து பணியிடைக்காலமான திருமதி.ஜெயலெட்சுமி(லேட்) என்பவரது வாரிசுதாரரும், மகளுமான செல்வி.எஸ்.கலையரசி என்பவருக்கு கருணையடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 76 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 10 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 70 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 47 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 25 மனுக்களும், புகார் தொடர்பான 5 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 23 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 50 மனுக்களும், பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 5 மனுக்களும் மற்றும் 152 இதர மனுக்கள் என மொத்தம் 463 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ம.சங்கரநாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொறுப்பு) பழனிதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

  Source : justknow.in
Post Date : 12-06-18
Total Visitors : 53
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments