Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  சசிகலா குடும்பத்தினர் 1,430 கோடி வரி ஏய்ப்பு; 5 நாட்கள் ரெய்டில் அம்பலம்; திவாகரன் மகள் சொகுசு கார் வாங்கியதில் வரி மோசடி அம்பலம்

சசிகலா குடும்பத்தினர் 1,430 கோடி வரி ஏய்ப்பு; 5 நாட்கள் ரெய்டில் அம்பலம்; திவாகரன் மகள் சொகுசு கார் வாங்கியதில் வரி மோசடி அம்பலம் சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பெங்களூரு நகரங்களில் 187 இடங்களில் 1800 வருமானவரித்துறை அதிகாரிகள் மெகா ரெய்டு நடத்தினர். இதில் ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஏராளமான அசையா சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. பல கிலோ தங்கம், வைர நகைகளை மதிப்பீடு செய்ய பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.
விவேக்கின் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட சசிகலா குடும்பத்தின் 15 வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்யும்போது சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கும். கைப்பற்றப்பட்ட சொத்து பத்திரங்களை ஆய்வு செய்து அவற்றை மதிப்பீடு செய்வது, சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்வது, அதன்பேரில் நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகள் படிப்படியாக நடைபெறும்.
அத்துடன் 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இந்த போலி நிறுவனங்கள் மூலம் கருப்புப் பணம் பெருமளவு மாற்றப்பட்டிருக்கிறது. சென்னைய அடுத்த படப்பையில் மிடாஸ் மதுபான ஆலையில் மிக முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. இங்கு ரூ.19 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
திவாகரன் மகள் ராஜமாதங்கி, வெளிநாடுகளில் இருந்து சொகுசுகார்களை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் இச்சோதனையில் அம்பலமாகியுள்ளது. பினாமி சொத்துகள் குறித்து அந்தந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 14-11-17
Total Visitors : 124
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments