Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 1,143 மனுக்கள்; 193 பயனாளிகளுக்கு ரூ.12.58லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 1,143 மனுக்கள்; 193 பயனாளிகளுக்கு ரூ.12.58லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் திருச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 193 பயனாளிகளுக்கு ரூ.12.58லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 193 பயனாளிகளுக்கு ரூ.12,58,500 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் கு.இராசாமணி வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக 4 நபர்களுக்கு ரூபாய் 53500 பெறுவதற்கான ஆணையும், செயற்கை அவயம் 01 நபருக்கு ரூ.14000ம், சமுக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு மற்றும் திருவெறும்பூர் வட்டத்தை சேர்ந்த முதியோர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகை 176 நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000மும். ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் விபத்து நிவாரண உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சத்திற்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து 02 மாற்றுதிறனாளி நபர்களுக்கு ரூ.15,000க்கான காசோலையையும் என மொத்தம் (12,58,500 ) பணிரெண்டு இலட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து ஐநூறு மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 12மனுக்களும்,குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் 07, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 118 மனுக்களும்,சத்துணவு அமைப்பாளர் பணி மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 43 மனுக்களும், புகார் தொடர்பான 50 மனுக்களும்,அடிப்டை வசதிகள் கோரியது 01, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 05 மனுக்களும்,திருமண உதவித்தொகை இலவச தையல் இயந்திரம்,இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்,சலவைபெட்டி தொடாபான மனுக்கள் 06, பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 06 மனுக்களும் என 248 மனுக்களும், இதர மனுக்கள் 895என குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 1,143 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சங்கரநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 10-07-18
Total Visitors : 46
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments